அன்பளிப்பு: 2011 பங்குனி தொடக்கம் (மாதா மாதம்)

ஆத்தியடி பிள்ளையாரின் கிருபையினால் மிகவும் சிறப்பான முறையில் கோவில் புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பண உதவி செய்தோர்க்கும், கோவிலின் திருப்பணி வேலையில் பங்கு பற்றிய அனைவருக்கும் இறைவன் அருள் புரிவாராக.

தருமபரிபாலன சபை எதிர் பார்த்ததுபோல, ஆத்தியடி மண்ணில் வாழ்ந்த/வாழுகின்ற சகல குடும்பத்தினரின் பண உதவி கிட்டாமல் போனாலும், சில நல் உள்ளம் படைத்த அடியர்களினாலும், தம் மண்ணையும், தமது உறவுகளை நேசிக்கும் பெருந்தன்மை கொண்ட சில உறவினர்களினாலும் மனம் உவர்ந்து செய்த நன்கொடையினால், கோவில் வேலைகளை தங்கு தடை இன்றி இனிதே நிறைவேற்றக் கூடியதாக இருந்தது.

கோவிலில் இன்னும் சிறதளவு வேலைகள் பாக்கி உள்ளன. ஆகவே இந்த திருப்பணியை முழுமையாக பூர்த்தி செய்ய அனைவரும் உதவ முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். .

கோவில் திருப்பணி வேலைகளுக்காக 2011-பங்குனி-01 முதல் வரை நிதி உதவி செய்த அடியார்கள் விபரங்களை கீழே பார்க்கவும்.

நன்றி